ஆகஸ்ட் 13-உலக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு தினம்

 இன்று.
உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த, இந்தியாவில் ஆண்டுதோறும், ஆகஸ்ட் 13ம் தேதி உடலுறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நம் நாட்டில் ஆண்டிற்கு சராசரியாக 2 லட்சம் பேர் விபத்தில் சிக்கி மூளைச்சாவுக்கு ஆளாகி இறக்கிறார்கள். இவர்களது கிட்னி, இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை வீணாக மண்ணுக்குப் போகிறது. 

மண்ணுக்கு வீணாகச் செல்லும் உறுப்புகளை வாழக் காத்திருக்கும் மனிதருக்கு வழங்கினால், தானம் பெறுபவரும் வாழ்வார், தானம் கொடுத்தவரும் மற்றொரு உயிரில் வாழ்வார். ஆனால் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்படாமல் வீணாகிறது. 

மூளைச் சாவு ஏற்பட்டவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க உறவினர்கள் முன் வர வேண்டும். ஆனால் 131 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய மக்களில், வெறும் 1 சதவீதத்தினர் மட்டுமே உடலுறுப்பு தானம் செய்வதாக, மருத்துவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். 

மேற்கத்திய நாடுகளில் 70 முதல் 80 சதவீதத்தினர் உடலுறுப்புகளை தானம் செய்யும் நிலையில், இந்தியாவில் அது வெறும் 1 சதவீதம் மட்டுமே இருப்பதற்கு மத, மூட நம்பிக்கைகளே காரணம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments