Listen to few moments

உலகத்துலேயே கடுமையான சட்டம் உள்ள அரபு நாடுகளில் கூட யாரையுமே விசாரணை இல்லாமல் தண்டிப்பதில்லை. சென்னையில குளிர் கொஞ்சம் அதிகம் போல, அதனால் தான் இந்த கொள்ளை காரங்க நைட் தூங்கும் போது கூட ஷீ போட்டுக்கிட்டு தான் தூங்கினாங்க போல இருக்கு. என்னமா ரீல் விடுறானுங்க. கேமரா இல்லாத வங்கிகளில் கொள்ளை நடந்ததுன்னு சொன்னாங்க, ஆனா போலிஸ் கலர் போட்டோ வெளியிட்டு பாத்து மணி நேரத்துக்குள்ள என்கவுண்ட்டர். 30 லட்சம் கொள்ளை அடித்தவர்களுக்கு என்கவுண்ட்டராம், ஆனா ஒரு லட்சத்து எழுபது ஆறாயிரம் கோடி அடிச்சவங்க நீதிமன்றத்துல ஜாமீன் கேட்டு காத்திருக்காங்க.. இறையாண்மை கூட பணம் இருந்தா வேற மாதிரி போல. திருடனாய், பொது மக்களாய் கொள்ளை அடித்தால் இது தான் கதி. பொழக்க தெரியாத பசங்க, இவங்களும் அரசியல் வாதியோ, அரசு அதிகாரியாகவோ ஆயிற்று அப்புறம் கொள்ளை அடிச்சிருக்கணும், அப்பா ஜாமீன் கொடுத்து, சலூட் அடிச்சு அனுப்பி விடுவானுங்க. 5 பேர அரெஸ்ட் பண்ண துப்பில்லாம சுட்டுருக்காங்க.. இதுக்கு பாராட்டு வேற.. நல்ல வேளை பழக்க தோசத்துல தோஷத்தில் நில அபகரிப்பு வழக்கு போடாமல் இருந்தாங்களே. அதுவே பெரிய விஷயம். கொஞ்சம் விட்டா திமுக ஆட்சியில் பயிற்சி பெற்ற கொள்ளையர்கள்ன்னு சொல்லுவாங்க. காக்கி சட்டைகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்தி விடலாம் என்கிற நம்பிக்கை தப்பு. அப்படின்னா இதுக்கு பேரு ஜனநாயக நாடு இல்லை. சந்தேகத்தின் பேரில் கைது செய்வதே தவறென வாதாடும் நாட்டில், சந்தேகத்தின் பேரில் சுட்டே கொல்வது மிகப்பெரிய தவறு. தண்டனைகள் மிகக்கடுமையாக இருக்கவேண்டியது தான், ஆனால் அதை யார் நிர்ணயிப்பது என்பது தான் முக்கியம் மற்றும் தண்டிப்பதற்கு முன்னாடி யார் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்படவேண்டும். என்கவுண்டர் என்பது ஒரு தப்பை மறைக்க இன்னொரு தப்பு செய்வது. என்ன இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க இவர்கள் யார்? இந்த கொள்ளை அடிச்சா முப்பது லட்சத்துக்கு முன்னாள், ஐந்து உயிர் என்பது மிகப்பெரிய விஷயம். இதை ஆதரிக்கும் புண்ணியவான்களே, உங்க வீட்டு பிள்ளைங்க இதே மாதிரி திருட்டு கேஸ்ல மாட்டிக்கிட்டு என்கவுட்டர்ல சுட்டா சரின்னு சொல்லுவீங்களா? இதை ஆதரித்து சினிமா வசனமா எழுதுறீங்க, ஜனநாயகம், அரசியலைமைப்புன்னா என்னன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க. அது என்ன லாஜிக்ன்னே புரியல, எல்லா என்கவுண்ட்டர்களிலும் கண்டிப்பாக இரண்டு போலிஸ்க்கு மட்டும் காயம் ஏற்படுது. ஒருவேளை அந்த ரெண்டு பேரு தான் சிரிப்பு போலிசோ?

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth