திருக்குறள் குறள் : 1004

-
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.

மு.வ உரை :

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன்   தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

கலைஞர் உரை :

யாராலும் விரும்பப்படாத ஒருவன், தன் மரணத்திற்குப் பிறகு எஞ்சி நிற்கப் போவது என்று எதனை நினைத்திட முடியும்?

சாலமன் பாப்பையா உரை :

பிறர்க்கு ஏதும் வழங்காதவன் ஆதலால் எவராலும் விரும்பப்படாத அவன், தன் காலத்திற்குப் பின் தன்னை நினைவுபடுத்தி நிற்கப்போவது என்று எதை எண்ணுவான்?

இதுபோன்ற குறள்களை கற்க வேண்டுமா! இந்த லிங்கை கிளிக் செய்து திருக்குறள் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை  தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்:- https://play.google.com/store/apps/details?id=nithra.thirukkural

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth