சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்வை...

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி 'நச்'என்று ஒரு பார்zவை...
=================================================
பெயர்:
உ.சகாயம்

பிறப்பு:
பெருஞ்சுணை கிராமம்.
புதுக்கோட்டை மாவட்டம்.

ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉️

பெற்றோர்:
வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல.

அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க
அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க

தொழில்:
சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில்

மிகவும் பிடித்த வாசகம்:

✅லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து
✅உனக்கு அதிகாரம் இருந்தால் அதை ஏழைகளின் மேம்பாட்டிற்கு பயன்படுத்து
✅உயர உயரப் பற… வானம் வசப்படும்

அடிக்கடி கேட்ட வாசகம்:
1⃣உன்னை தண்ணியில்லா காட்டுக்கு….
2⃣இவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை...

நீண்டகால சாதனை:
23 ஆண்டுகளில் 24 முறை இட மற்றும் பணி மாற்றம்..

கடன் வாங்கி கட்டிய தன் ஒரே சொத்தை பகிரங்கமாய் அறிவித்த முதல் இந்திய ஐ.ஏ.ஸ் அதிகாரி.

மதுரையில் நடந்த முதல் நேர்மையான தேர்தல்.

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளின் உழவன் உணவகம்

மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லைன்னு பெப்சி கம்பெனிக்கு எட்டு பூட்டு போட்டது‼️

சென்னையில் 600 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு‼️

பாலாறு மணல் கொள்ளை தடுப்பு‼️

கோவை மதுபான ஏல சீரமைப்பு, பிரபல சைவ உணவக மதுபான பதுக்கல் முற்றுகை‼️

நாமக்கல் மாவட்ட ஒரு கோடி மரக்கன்று திட்டம்,
கொல்லி மலை அடிவாரத்தில் தடுப்பணை திட்டம்,
தொடுவானம் ~ கிராம மக்கள் தங்கள் புகார்களை இணைய வழியாக பதியும் திட்டம்‼️

✅✅ நட்டத்தில் இயங்கிய கோ ஆப் டெக்ஸை லாபத்திற்கு மாற்றியது

✅✅✅உச்சகட்ட சாதனை:
உயிரையும் பணயம் வைத்து கிராணைட் மோசடி பதுக்கல்களை அம்பலப்படுத்தியது.

நண்பர்கள்:
அரசியலில் யாருமில்லை.

எதிரிகள்:
கட்சி பேதமின்றி என்றுமே ஆளும் கட்சி மற்றும் அது சார்ந்த ஊழல் பெருச்சாளிகள்.

சமீபத்து எதிரிகள்:
அழகிரி, பிஆர்பி, கோகுல இந்திரா அன் கோ.

ஆறுதல்:
என்றும் வாய்மையே வெல்லும் என நம்பி ஆதரவளிக்கும் நல்ல உள்ளங்கள், இளைஞர்கள்.
அவ்வப்போது நீதிமன்றம்.

பலம்:
நேர்மை

பலவீனம்:
ஊழலிலேயே பிறந்து வளர்ந்து எவனும் எக்கேடும் கெட்டுப்போகட்டும்… யாராலும் இதை திருத்த முடியாது என்று சொல்லி டிவி பார்த்து பொழுது போக்கும் கோடிக்கணக்கான தமிழர்களிடையே வாழ்வது.

லட்சியம்:
ஊழல் இல்லா இந்தியா

கிராமப்புற ஏழைகளுக்காக
அனைத்து வசதிகளும் கூடிய இலவச மருத்துவமனை.

இதுவரை அறிந்த உண்மைகள்:
நேர்மை நிச்சயம் வெல்லும்,
சில நேரங்களில் அது தாமதமானாலும் சரியே.

இதுவரை புரியாதது:
அடுத்த பதவியும் இடமும்

விரும்புவது:
தமிழ், தமிழர்கள், கிராமம், திலீபன் மற்றும் யாழினி

விரும்பாதது:
முக்கிய குற்றவாளிக்கே கடிதம் எழுத வேண்டிய நிலை

நண்பர்களே..!

நேர்மைக்கு சொந்தக்காரரான சகாயம் போல் எதற்கும் சகாயமாகாத அதிகாரிகள் நம் நாட்டுக்கு நிறைய தேவை.

சினிமா, கதை நாயகர்களை விட்டுவிட்டு இவரை போன்ற நல்ல மனிதர்களை,
நம் குழந்தைகளுக்கு
முன்மாதிரியாக அறியத்தருவோம்.

ஊழலற்ற நல்ல சமூகத்திற்கு வழிகாட்டுவோம்.

எவ்வளவு தேவையற்ற விஷயங்களை Shere செய்கிறோம் 

இதனை ஒரு நான்கு பேருக்கு அனுப்பி அதில் ஒருவர் இதனை 
கருத்தில் கொண்டாலும் அது தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி தான் 

சகாயம் என்ற சகாப்தத்திற்கு வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் சேவை தமிழ் நாட்டில் தேவை 

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth