ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

💻
ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ....

📺
ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்

செல்போன்ல பட்டன் பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.


மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாம தான்...!

📋
கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளா தான் இருக்கும்.

📚
மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

வெட்டிப் போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

📬
தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்ம தான் .

👪👬👫👭👪
கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாத்தான் இருக்கும்.

📝
காதல் கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப் பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.

📩
நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

📰
10th 12th ரிசல்ட்  பேப்பர்ல பார்த்த கடைசி தலைமுறை நாம தான்

📺
கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுறை நாம தான்

📼
ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.

🚵🚲🚴
சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.

📨
போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்

🍡
ஜவ்வு மிட்டாயில் வாட்ச் கட்டினது நாம தான்

📚📖📕
நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,

📙📓
கோனார் தமிழ் உரை, வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.

நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cfc பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...

⚪⚫
5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,

🏠
மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை நாம தான்

இதையெல்லாம் படிக்கும் போது சிறுதுளி கண்ணில் எட்டிப் பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்.
😢
பிடித்தால் இதை மற்றவர்களிடமும் ஷேர் செய்யுங்கள்...! 💞💞💞        அன்புடன் ...........் 💛💙💜💚❤💗💓💕💖💞💌

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth