மாதா, பிதா, குரு, தெய்வம்,

சிவமயம் சிவாயநம

மாதா, பிதா, குரு, தெய்வம், என்று ஏன் சொல்லியிருத்கிறார்கள் நம் பெரியோர்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்

மாதா ( தாயிற் சிறந்த கோயிலும் இல்லை)

மாதா( தாய் ,அம்மா)   என்று பொருள்படும் இதில் இரண்டு அர்த்தங்கள் பொதிந்துள்ளன ஒன்று இந்த உலகைக் காக்கும் அன்னையாக பார்வதி தேவியார் நமக்கெல்லாம் அன்னையாக இருந்து காத்து அருள்கிறார்  இரண்டாவது தாயாக நமக்கு இந்த உடலை கொடுக்கும் தாயாக நம் அம்மா இருக்கிறார் இதை செய்ய வைப்பதெல்லாம் பரம்பொருள் ( சிவபெருமான்)  ஆவார் 

பிதா ( தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை)

பிதா ( அப்பா, தந்தை)
என்று பொருள்படும் இதிலும் இரண்டு அர்த்தங்கள் உண்டு ஒன்று நமக்கு உயிரை கொடுத்த தந்தையாக சிவபெருமானும், உடலை கொடுத்த தந்தையாக நம் அப்பாவும் இதில் இருக்கிறார் இவற்றையெல்லாம் சிவபெருமான் நம்மீது ( உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் பேரானந்தமாக இருக்கும் பொருட்டு)  கொண்ட பெருங்கருணையே ஆகும்

குரு ( குருவே சிவம் சிவமே குரு )

குரு என்பவர் வேறு யாரும் இல்லை சிவபெருமானே மானிட சட்டை தாங்கி வந்து நமக்கு மெய்ஞானத்தை உணர்த்துபவர் ஆவார் அவர் நமக்காக இந்த ஆன்மா ( உயிர்)  பக்குவம் அடைய வேண்டி குருவின் மூலம் பல கலைகளையும், வித்தைகளையும் கற்றுக்கொடுப்பதற்காக சிவபெருமானால் அனுப்பப்படுபவர் ஆவார் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை ஆகவே குருவருள் ஒவ்வொருவருக்கும் மிகவும் அவசியமாகிறது குருவே சிவம் சிவமே குரு ஆவார்

தெய்வம் ( ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஒரு கடவுள் கொள்கையில் இருப்பது )

இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களிடத்தும் எந்த பேதமின்றி நீதிமானாக இருந்து அருளாட்சி செய்யும் கடவுளே தெய்வமாகும்

மேலும் நாம் நம் தந்தைக்கு செய்யும் கடமைகள் என்ன?  அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் எது?  என்று பார்ப்போம்

1. தந்தைக்கு முன்பு குரலை ( சத்தமாக) உயர்த்தாதீர்

அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்

2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்

அதனால் உங்களுக்கு மரியாதையும் நல்ல நம்பிக்கையும்  கிடைக்கும்

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்

அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்

ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்

அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாகவும், அனுபவமாகவும் ) பயன் அடைந்துக்கொள்ளுங்கள்

தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்

மிகவும் அழகாக முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்

அவரின் மரணத்திற்கு முன்பே அவருக்கு மரியாதை செய்வோம்

அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்

அவர் உன்னுடைய அருகில்
இருக்கும்போது அவர் உடைய
அருமை உனக்கு தெறியபோவதுமில்லை

ஆகவே நாம் நமது கடமைகளை சரிவர செய்ய வேண்டும் ஏனென்றால் கண்கண்ட தெய்வம் நமக்கு நம் தாய் மற்றும் தந்தை ஆவார்

அவர்களை நாம் பேணி பாதுகாத்து தேவையறிந்து எல்லா நேரங்களிலும் பாது காப்பது நமது கடமையாகும் மேலும் அவர்கள் தான் நமக்கு பெரிய பொக்கிஷம் ( சொத்து ) ஆகும்

பரம்பொருளின் ( சிவபெருமானின்)  பெருங்கருணையினால் நமக்கு நல்ல தாய், தந்தையை கொடுத்தும் மேலும் தனு, கரண, புவண, போகம் எல்லாம் கொடுத்து அனுபவிக்கவும் நாம் முறையாக மெய்ஞானத்தை உணர வேண்டும் என்று தானே குருவாக வந்து நம்மை ஆட்கொண்டு தன் திருவடிக்கீழ் பேரானந்தமாக இருக்க வேண்டி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்பவர் ஒருவருரே நம் பரம்பொருள் ( சிவபெருமான்)  ஆவார்

ஆகவே நாம் சைவ சமய நெறிகளிலும், சைவ சித்தாந்த நெறிகளிலும் நின்று வாழ்வதே வழிபாடு ஆகும்

பழைய வைதீக சைவம் மற்றும் சமயம்  பரக்கவே

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்

திருச்சிற்றம்பலம்

இப்படிக்கு சிவனடிசீரே பரவுவார் சிவ சுப்பிரமணி சைவ சித்தாந்த சபை ஒசூர்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth