கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன?

கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் என்றால் என்ன? (RIGHT TO EDUCATION. ACT -2009)

தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம்  இல்லாமல் நமது குழந்தைகளை  இலவசமாக படிக்க வைக்க முடியுமா?

முடியும்!

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

ஆம்.

இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம்  அதற்கு வழி வகை செய்கிறது.

இந்த சட்டம்  ஆறு வயது முதல்  14 வயதுக்கு கீழ் உள்ள அனைத்து குழந்தைகளும் இலவச கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் யார் யார் பயன் பெறலாம்?

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் !

தாழ்த்தப்பட்டவர்கள்,  மலை ஜாதியினர்,  பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்,

கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்கள்.

எய்ட்ஸ் நோயாளிகளின் குழந்தைகள்,

மாற்றுத்திறனாளிகள்.

திருநங்கைகள்,

ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்துக்கு  கீழ் உள்ள முற்ப்பட்ட வகுப்பினர்கள்.

நாம் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.

ஒரு வேளை நாம் வசிக்கும் பகுதியில்    ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அரசு பள்ளி இல்லை என்றால்,
அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் நமது குழந்தைகளை கட்டாய கல்வி உரிமைச்சட்டம் (RIGHT TO EDUCATION ACT -2009)  R T E. ன்  கீழ் கல்வி கட்டணம் இல்லாமல் இலவசமாக சேர்க்கலாம்.

உங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் இதற்கான விண்ணப்பத்தினை பெற்று    முகவரி ஆதாரம், வருமான சான்றிதழ்,  பிறப்பு சான்றிதழ்  உள்ளிட்ட ஆவணங்களை ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும் வழங்கலாம்!

அந்த பள்ளிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணங்களை அரசு செலுத்தும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

L K G வகுப்பு முதல் மற்றும் ஆறாவது வகுப்பில் சேர்ந்து கல்வி பயில அனுமதி உண்டு.

அனைத்து தனியார் பள்ளிகள் 25 சதவீதம்  இடங்களை  கட்டாய கல்வி  உரிமைச் சட்டத்தில்  சேரும் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.

அந்த மாணவர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணங்களையும் வசூலிக்க கூடாது.

ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

உங்கள்  குழந்தைகளை தனியார் பள்ளிகள் சேர்க்க மறுத்தால்  உங்கள் மாவட்டத்தில் இருக்கும்  மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்,  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மெட்ரிக்பள்ளி ஆய்வாளர்,  மெட்ரிக்பள்ளி இயக்குநர்,  இவர்களுக்கு புகார் செய்யுங்கள்.

சில பள்ளிகள் அனுமதி முடிந்து விட்டது என பொய்யான தகவல் வழங்குவார்கள்!

கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் பற்றிய விபரங்களை அனைத்து பள்ளிகளும் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில்  தகவல் பலகை வைக்க வேண்டும்!

எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் குழந்தைகளின் கல்வி  கனவினையும் நிறைவேற்றுங்கள்.

கல்வி உங்கள் மிக அருகில்!

பெயர் தான் இலவசக்கல்வி !

இது கேவலம் அல்ல!

அரசு கட்டணம் செலுத்துகிறது!

கவலை வேண்டாம்!

இது கனவல்ல!  நிஜம் !

உங்கள் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டாலோ அல்லது இது சம்பந்தமான கூடுதல் தகவல் தேவை பட்டாலோ உங்களுக்கு வழி காட்ட. எங்களை தொடர்பு கொள்ளுங்கள் !

மக்கள் பணியில்  அன்புடன்,  ,

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "
LEGAL AWARENESS AND ANTI -CORRUPTION ORGANIZATION
363, காந்தி ரோடு,
பெரியார் காலனி,
திருப்பூர் -641 652

நாஞ்சில் K. கிருஷ்ணன்
நிறுவனர்,
98655 90723

அரியலூர் R. சங்கர்
மாநில தலைவர்
98655 43303

V. சுப்பிரமணியன்
பொதுச்செயலாளர்
98420 17989

குறிப்பு : மேற்காணும் தகவல் பலகை திருப்பூர் வித்தியா விகாஸ்  பள்ளி மீது புகார் அனுப்பிய காரணத்தினால் பள்ளி நிர்வாகத்தால் வைக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth