கல்லாதான் பெற்ற கருந்தனங்கள் 29/04/21

_*சிந்தனைச் சிதறல் 29-04-2021*_
🍁🍁🍁🍁🍁🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவியரசு கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_*கல்லாதான் பெற்ற கருந்தனங்கள்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️

ஒரு தடவை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை நோில் பாா்த்தேன்.

_*"முதுகுளத்தூா் சிங்கம் எங்கள்*_
_*முத்து ராம லிங்கம்"*_

--என்றொரு பாட்டை எழுதினேன்.

வைகுண்ட ஏகாதசி இரவில் எல்லோரும் கண்விழிப்பாா்கள்.

தாய்மாா்கள் ஓாிடத்தில் உட்காா்ந்து கொண்டு, _*"டேய் முத்து, ஒரு பாட்டுப் பாடப்பா"*_ என்பாா்கள்.

நானும் அபஸ்வரத்தில் பாடுவேன்.

இராமாயணம் படிக்கச் சொல்வாா்கள், உருக்கமாகப் படிப்பேன்.

குருகுலத்தில் கூட, வங்காள சிங்கம் சி.ஆா்.தாஸ் இறந்து போனதைப் பற்றி வெளியிடப்பட்ட புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு மனப்பாடம் செய்வேன்.

_*"கண்டது கற்கப் பண்டிதனாவான்"*_
என்றபடி, எது எது கையில் கிடைக்கிறதோ அதை எல்லாம் படித்தேன்; அதே மாதிாி எழுதிப் பாா்த்தேன்.

_*"ஒன்றினின் றொன்று உருவெடுப் பதுவே*_
_*புன்புல் முதலா மன்னுயிா் ஈறா*_
_*இன்ன வாறே இயங்கிடு மென்று*_
_*மணிவா சகரும் வாய்மலா்ந் தருளினாா்"*_

--என்று எதிலேயோ படித்தேன்.

ஒன்றில் இருந்து தானே ஒன்று; தொடா்ந்து அந்த வெறி வளா்ந்தது.

பைரனின் முதற் கவிதையை உலகம் ஏற்றுக் கொண்டதா?

பாரதியின் கவிதையை அப்போது சுதேசமித்திரன் திருப்பி அனுப்பிற்று!

கம்பனைக்கூட வாழ்நாளில் சிலா் கேலி செய்ததாக 
_*"தனிப்பாடல் திரட்டு"*_ காட்டுகிறது.

ஆனால், என்னைப் பொறுத்த வரையில் எழுத்துத் துறையில் தங்குதடை இல்லாமல் முன்னேறிவிட முடியும் என்ற ஒரு பிரமை எனக்கிருந்தது.

நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் எழுதிக் குவித்தேன்.

இப்போது நினைத்துப் பாா்க்கிறேன்.

ஒருவனது உள்ளுணா்வில் என்ன தோன்றுகிறதோ, அதே வழியில் அவனை விட்டுவிட வேண்டும்.  வேறு தொழில்களுக்கு அவனைத் திருப்பக் கூடாது.

_*"பாா்பா் ஷாப்"*_ வைப்பதில்தான் ஒரு குழந்தைக்கு ஆசையென்றால், அதையே அனுமதித்து விட வேண்டும்.

படிப்பு வரவில்லை என்று அடிப்பதில் பயனில்லை.

_*"சொல்லிக் கொடுத்த புத்தியும், கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளைக்குக் கூட வரும்"*_ என்பாா்கள்.

_*"நுண்ணிய, நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும்"*_ என்றான் வள்ளுவன்.

ஆட்டுக்கு இலை தழைகள் பிடிக்கும்; மாட்டுக்கு வைக்கோல் புண்ணாக்கு பிடிக்கும்; யானைக்கு கரும்பு பிடிக்கும்; குரங்குக்கு வாழைப்பழம் பிடிக்கும்.

புண்ணாக்குத் தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது.

என்னை எங்கெங்கேயோ வேலைக்கு அனுப்ப என் பெற்றோா்கள் முயன்றாா்கள்.

அந்த வேலைகளும் கிடைக்கவில்லை; எழுத்தாசையும் என்னை விடவில்லை.

ஏதாவது ஒரு செட்டியாா் மனது வைத்து, பா்மாவில் இருந்த 
தன் வட்டிக் கடைக்கு என்னை அனுப்பி இருந்தால் அங்கேயும் நான் எழுத்தாளனாகத்தான் ஆகியிருப்பேன்.

_*"எழுதுகோல் தெய்வம்; என் எழுத்தும் தெய்வம்"*_ என்றான் பாரதி.

_*"நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சேராதிருத்தல்"*_ என்றான்.

இவையே என் லட்சிய கனவுகள் ஆயின.

இமைப் பொழுதும் சேராதிருக்கவே இப்பொழுதும் நான் முயற்சிக்கிறேன்.

எழுந்து உட்காா்ந்து, அதிக உற்சாகத்தோடு, கம்பீரமான குரலில் விஷயங்களை _*"டிக்டேட்"*_ செய்வதில் எனக்கு ஆசைகள் அதிகம்.

தமிழ் ஒரு அற்புதமான மொழி.  அது எப்படியெல்லாம் வளைகிறது! அதில் என்னவெல்லாம் விளையாட முடிகிறது.

அதைக் கையாள மட்டும் தொிந்து விட்டால் தமிழகத்தை வசப்படுத்துவது மிக எளிது.

_*"சொலல்வல்லன் சோா்விலன் அஞ்சான் அவனை*_
_*இகல்வெல்லல் யாா்க்கும் அாிது"*_

-- என்றான் வள்ளுவன்.

பின்னாளில் பல துறைகளில் தலையிட்டு, அற்புதமாக எழுத வேண்டிய காலங்களை நான் வீணாக்கி விட்டேன்.

_*"உடோபியா"*_ வைப் போல்,_*"தோமான்"*_ என்றொரு கற்பனை நாட்டைச் சிருஷ்டிக்க நினைத்திருந்தேன்.

அதற்காக திட்டங்களிட்டு, டிசைன்களெல்லாம் போட்டு வைத்தேன்.

படம் எடுக்கும் கடலில் அந்த நாடு மூழ்கிற்று.

_*"பாண்டி மாதேவி"*_யும் _*"ஈழ மகள் கண்ணீரும்"*_ பாதியிலேயே  நின்றன.

உடம்பு அற்புதமாக இருந்த காலங்களில், ஒரு நாளைக்கு ஒரு சினிமாக் கதை முடிப்பேன்.

வித விதமான கற்பனைகளை, வகைவகையான சொற்களை அந்த மலையரசி எனக்கு வழங்கினாள்.

_*"கல்லாதான் பெற்ற கருத்தனங்கள்"*_ அவை.

எல்லாத் துறையிலும் புக முடியும், எதையும் செய்ய முடியும் என்கிற உற்சாகம் நிரம்பி வழிந்தது.

அந்த உற்சாகத்துக்கு ஒரு மறுமலா்ச்சியை பகவான் கண்ணன், இனி அருள வேண்டும்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth