இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்ந்த தந்தை...!

தன் இரு புதல்வர்களை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக்கி, சேலத்துக்கு பெருமை சேர்ந்த தந்தை...!
நம் சேலம் மண்ணின் மைந்தர்களான திரு.வெ.திருப்புகழ் I.A.S, மற்றும் திரு .வெ.இறையன்பு I.A.S இருவரின் தந்தை மரியாதைக்குரிய அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் இன்றும் சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகரில் பழைமைமாறாத பாரம்பரிய வீட்டில் இயற்கைச்சூழலில் எளிமையாக வசித்து வருகிறார்...!
அய்யா திரு.வெங்கடாஜலம் அவர்கள் தமிழ்மீது தீவிரப்பற்றும் ,கல்வியின் முக்கியத்துவத்தையும் நன்கு உணர்ந்தவர்...! அதனால் தன் வாரிசுகளுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டி, நன்கு படிக்கவைத்து மிக சிறந்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்...!
அய்யாவின் மூத்தமகள் திருமதி பைங்கிளி அவர்கள் சேலம் சாரதா கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியாக திறம்பட பணியாற்றி ஒய்வு பெற்றவர்...!
அடுத்த மகள் திருமதி இன்சுவை அவர்கள் அருமையாக படித்து பத்து பட்டங்களுக்கு மேல் பெற்றவர்..!
மூத்த புதல்வர் திரு.வெ.திருப்புகழ்  ஐ.ஏ.எஸ் அவர்கள் டெல்லியில் இந்திய பிரதமர் மோடியின் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்...!
மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்த போது ஏற்பட்ட பூகம்பத்தின் போது,அப்போது அங்கு பணியாற்றிய திரு.வெ.திருப்புகழ் ஐ.ஏ.எஸ் அவர்கள் மீட்பு பணிகளை சிறப்பாக களத்திலிருந்து மேற்கொண்டு மக்களின் பாராட்டை பெற்றவர்...! Disaster management படித்த ஒரே ஐ.ஏ.எஸ் அதிகாரி இவரே..!
இளைய புதல்வர் நம் அன்பிள்குரிய வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் தமிழக அரசுத்துறை முதன்மை செயலர்,இயக்குனராக சென்னையில் பணியாற்றி வருகிறார்...!
இறையன்பு சார் நேர்மையான,திறமையான,எளிமையான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்....!
சுனாமி மீட்பு பணிகளை நாகப்பட்டினம் பகுதிகளில் சிறப்பாக மேற்கொண்டவர்...!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலாபள்ளிகளை துவக்கி அனைவரையும் கல்வி கற்க வைத்தவர்...!
மிகச்சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்...! இலக்கியவாதி, மனிதநேய பண்பாளர், 30 க்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதிய நூலாசிரியர் என பலசிறப்புக்கள் திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உண்டு...!
அய்யா திரு.வெங்கடாஜலம் அந்தகாலத்தில் பலமைல் தூரம் சைக்கிள் மிதித்து சென்று வேலைபார்த்து தன் குழந்தைகளை படிக்க வைத்தவர்....!
இப்படி இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நம் சேலம் மண்ணிற்கு தந்து பெருமை சேர்ந்த அய்யா திரு வெங்கடாஜலம் அவர்கள் & அம்மா பேபி சரோஜா அவர்கள்.

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth