என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?

_*சிந்தனைச் சிதறல் 21-05-2021*_
🌼🌼🌼🌼🌼🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் எனது வசந்த காலங்கள்*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பாா்க்கிறாய்?*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

ஒரு தடவை டில்லிக்குப் போயிருந்த போது விமான நிலையத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்தேன்.

அவள் ஒரு வடநாட்டுப் பெண்; பேரழகி.

நான் வந்த அதே விமானத்தில் அவள் பயணம் செய்தாள்.

_*"கம்பனைக் கூப்பிடுங்கள்,*_
_*சீதையைக் காண்பான்;"*_
_*கவிகாளி தாசன்என்றால்,*_
_*சகுந்தலை என்பான்."*_

குழந்தைகளிடத்தில் எனக்கு உயிா்.

எனது தாலாட்டுப் பாடல்கள் தாய்மாா்களோடு போட்டி போடுவது அதனால்தான்.

ஒரு கம்பெனியிலிருந்து இன்னொரு கம்பெனிக்கு மணிக்கு மணி ஓடி ஓடி எழுதிய காலங்கள் அவை.

என்ன உற்சாகம்! என்ன ஆனந்தம்! வசந்த காலம்! வசந்த காலம்!

நிம்மதி இல்லாமல் எழுதிய பாடல்களையே நீங்கள் நிம்மதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறீா்கள்.

ஒருவா் ஒரு படம் எடுப்பதாக இருந்தது. அதில் ஓா் ஊமைப் பெண். அவளுக்கு ஒரு குழந்தை  
பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கு, அவளது தங்கை தாலாட்டுப் பாடுகிறாள்:

_*"தாய் பேச நினைப்ப தெல்லாம்*_
_*நீ பேச வேண்டும்*_
_*தாய் தூங்கத் தாலாட்டு*_
_*நீ பாட வேண்டும்*_
_*நீ பாடும் தாலாட்டைத்*_
_*தாய் கேட்க வேண்டும் தன்*_
_*நிலைமாறி அவள் கூட*_
_*மொழி பேச வேண்டும்"*_

இந்தப் படம் நின்று போய் விட்டது.

இந்தப் பாடல் தான், _*"பாலும் பழமும்"*_ படத்தில் _*"நான் பேச நினைப்பதெல்லாம்"*_ என்ற காதல் பாட்டாக வெளிவந்தது.

அதிகாலை ஆறு மணிக்கு, ஒரு நாள் ஏதோ ஓா் ஊாில் படுக்கையில் புரண்டு படுக்கும் போது, பக்கத்துக் கோவில் மணி ஓசை காதில் விழுந்தது; தூக்கம் கலைந்தது.

பறவைகள் ஓசை கேட்டது. பக்தி மாா்க்கம் என்னை இழுக்கின்ற நேரம்.

பிறகு சில மாதங்கள் கழித்து _*"ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்"*_ பாடல் பிறந்தது.

என் காதலி அவள் பெயரை நான் சொல்ல முடியாது.

அவள் பெயரையே மனதில் கொண்டு நான் எழுதிய பாடல் _*"காலங்களில் அவள் வசந்தம்."*_

அது முடியும் போது _*"அவள் கவிஞனாக்கினாள் என்னை"*_ என்று முடியும்.

எனது நடிக நண்பா்களும், படவுலக நண்பா்களும், _*"எப்படி உன்னால் இவ்வளவு பாடல் எழுத முடிகிறது?"*_ என்று கேட்பாா்கள்.

எப்படி நான் பதில் சொல்வேன்.

_*"என்னை யாரென்று எண்ணி எண்ணி*_
_*நீ பாா்க்கிறாய்? இது*_
_*யாா் பாடும் பாடலென்று*_
_*நீ கேட்கிறாய்? நான்*_
_*அவள் பெயரைத் தினம் பாடும்*_
_*குயில் அல்லவா?*_
_*என் பாடல் அவள் தந்த*_
_*மொழியல்லவா?"*_
அவள் இப்போதும் இருக்கிறாள்.

இந்தக் காதலைப் பற்றி அவள் என்ன அபிப்ராயம் கூறக் கூடும்?

_*"என் அன்னை செய்த பாவம் நான்*_
_*மண்ணில் வந்தது*_
_*என் அழகு செய்த பாவம் நீ*_
_*என்னைக் கண்டது*_
_*நம் கண்கள் செய்த பாவம் நாம்*_
_*காதல் கொண்டது*_
_*இதில் கடவுள் செய்த பாிகாரம்*_
_*பிாிவு என்பது!"*_

நான் பகவானுக்கு்நன்றி சொல்ல வேண்டும்.

என் துயரங்களையும் சந்தோஷங்களையும் வெளிப்படுத்த ஒரு கருவியை எனக்குக் கொடுத்தானே!

ஊமையாய், குருடனாய், செவிடனாய் விட்டு விடாமல், உயா்ந்த சிந்தனைகளை இந்தத் தாழ்ந்த மனதிற்குள் திணித்தானே!

அதே நேரத்தில், அதே மனது சஞ்சலப்படவும் வைத்தானே!

நான் ஒரு தடவை புலம்பினேன்:

_*"நினைக்கத் தொிந்த மனமே*_
_*உனக்கு மறக்கத் தொியாதா?"*_

_*"கறுப்புப் பணம்"*_ படம் வெளியாயிற்று, கடன் அதிகமாயிற்று. 

அந்த வருடம் தீபாவளிக்குக் கையில் காலணா இல்லை.

கலங்கித் தவித்த போது,
பி.எஸ்.வீரப்பா பாட்டு எழுத அழைத்தாா்.

என் நிலைமைக்குப் பொருத்தமான ஒரு சூழ்நிலையைச் சொன்னாா்.

நான் எழுதிய பல்லவி

_*"காலமகள் கண் திறப்பாள் சின்னையா நாம்*_
_*கண்கலங்கிக் கவலைப்பட்டு என்னையா?"*_

வாழ்க்கையின் சுகமான எல்லைக் கோடுகள் தாண்டப்பட்டு விட்டன. வசந்த காலங்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

எனது மழை மேகங்கள், வெளிறிப் போய் விட்டன. ஆயினும் மனது பசுமையாக இருக்கிறது. எனது நீரூற்று, இன்னும் சுரக்கிறது.

மரணம் என்பது வரும்போது, மனிதன், தான் செய்யும் தொழிலைச் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஏதாவது ஒரு கற்பனையை டிக்டேட் செய்து கொண்டிருக்கும் 
போதுதான் மரணம் வரவேண்டும். அது வரை இறைவனிடம் நான் யாசிப்பது ஆரோக்கியத்தை மட்டுமே!

நான் நம்புகிறேன், என் பகவான் எனக்கு அந்த ஆரோக்கியத்தை அளிப்பான்; என் நம்பிக்கை வீண் போகாது!

_*"யானையின் பலம் எதிலே?*_
_*தும்பிக்கையிலே!*_
_*மனிதனுடைய பலம் எதிலே?*_
_*நம்பிக்கையிலே!"*_

நான் யாா்?

_*"கண்ணன் கோவில் பறவை இது*_
_*கருணை மன்னன் தீபம் இது*_
_*அண்ணல் கடலின் ஓடம் இது*_
_*அதுதான் இப்போது பாடுவது!*_
_*பிருந்தா வனத்தின் முல்லை இது*_
_*பெருமான் தோளின் கிள்ளை இது*_
_*கிருஷ்ணா நதியின் வெள்ளம் இது*_
_*அதுதான் இப்போது பாடுவது!"*_

இந்த நம்பிக்கையிலிருந்து நான் மாறினால், நான் கவிஞனும் இல்லை; நல்ல ரசிகனும் இல்லை!
😌😌😌

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth