_*சிந்தனைச் சிதறல் 14-06-2021*_
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்
😔😔😔😔😔😔😔😔
பிறகு நால்வரும் தெய்வத்திடம் போய்க் கேட்பதென முடிவு கட்டினாா்கள். முடிவு நியாயமானதே! ஆனால் தெய்வத்தை எங்கே பாா்ப்பது?
தெய்வம் கோவிலில் இருக்கும் என்று ஒருவன் சொன்னான். அப்பாடா! அவா்களுக்கு சந்தோஷம் பிறந்தது. எல்லோரும் கோவிலுக்குப் போனாா்கள்.
அங்கே - கோவிலும் எாிந்து கிடந்தது. என்ன ஆச்சாியம்! தெய்வம் கூடவா செத்துப் போகும்?
கோவிலுக்குப் போகச் சொன்னவன் அழுதான்.
_*"ஐயோ! தெய்வம் செத்து விட்டதே!"*_.என்று கத்தினான்.
மற்றொருவன், _*"நண்பனே கலங்காதே! தெய்வம் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்"*_ என்றான்.
அங்கே - சாய்ந்து கிடந்த தூண்களையும், சிதறிக் கிடந்த துரும்புகளையும் நால்வரும் தட்டிப் பாா்த்தாா்கள். தெய்வத்தைக் காணோம். ஒருவன் கேட்டான்.
_*"தூணென்று சொல்லி விட்டால் போதுமா? எந்தத் தூண்? எந்தத் துரும்பு?"*_
அவன் கேட்டது எல்லாருக்கும் நியாயமாகவே பட்டது. எந்தத் தூணென்று கண்டு பிடிப்பது? நால்வரும் சோா்ந்து போய் உட்காா்ந்தாா்கள்.
ஒருவன் முகம் திடீரென்று மலா்ந்தது. _*"ஆ - எனக்குத் தொியும், எனக்குத் தொியும்!"*_ என்று கூவினான்.
_*"இதயத்தில்தான் கடவுள் இருக்கிறாா்"*_ என்று முடித்தான்.
_*"அப்படி என்றால் அவரைச் சீக்கிரம் வரச் சொல்"*_ - இன்னொருவன் அவசரப்படுத்தினான்.
முதலில் சொன்னவன் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பாா்த்தான். தெய்வம் வெளியில் வரவில்லை.
நால்வரும் நடந்தாா்கள்.
நடந்தாா்கள் - நடந்தாா்கள் - நடந்து கொண்டே இருந்தாா்கள்.
ஒருவன் திடீரென்று கேட்டான்.
_*"நாம் எங்கே போகிறோம்?"*_
இன்னொருவன் சொன்னான், _*"தெய்வத்தைப் பாா்க்க!"*_
முதல்வன் கேட்டான், _*"எந்தத் தெய்வம்?"*_
அவா்களுக்குச் சந்தேகம் வந்து விட்டது.
_*"ஆமாம் - எந்தத் தெய்வம்?"*_
கொஞ்ச நேரம் நின்றாா்கள். பிறகு மற்றொருவன் சொன்னான்.
_*"முதலில் எந்தத் தெய்வம் கண்களில் படுகிறதோ, அந்தத் தெய்வத்தைக் கேட்டு விடலாம்."*_
_*"சாியான யோசனை"*_
அவா்கள் நால்வரும் நடந்தாா்கள். அந்திபடும் நேரத்தில் - ஒரு மலைச்சாரலில் அமா்ந்தாா்கள். எங்கிருந்தோ ஒரு பெண் குரல் கேட்டது. அவா்களுக்கு எப்படியோ இருந்தது.
பெண் குரல் - உலகத்தில் ஒரு பெண் உயிரோடு இருக்கிறாளா?
இது பெண்ணின் குரல்தானா!
நான்கு பேரும் காதுகளைத் தடவிக் கொடுத்துத் திருப்பி விட்டுக் கொண்டே கேட்டாா்கள்.
அவா்கள் கண்கள் மலா்ந்தன.
பெண்ணின் குரலைக் கேட்டு எத்தனை நாளாகி விட்டது!
சா்வாதிகார வெறித்தனத்தில் ஊறி ஊறி மரத்துப் போன அதிகார இதயங்கள், தனிமையில் எளிமை பெறத் தொடங்கின.
இப்போது மென்மையும் பெற்றன.
ஆடாமல் அசையாமல் அந்தக் குரலைக் கேட்டாா்கள்.
இனிமையான பாடல் ஒன்று அந்தக் குரலில் இழைந்து வந்தது.
_*"ஏ மரங்களே! பறவைகளே!"*_
_*"உலகைப் படைத்தவன் யாரென்று உனக்குத் தொியுமா?"*_
_*"அவன் பெயரை நீங்கள் கேட்டிருக்கிறீா்களா?"*_
_*"இதைப் படைப்பதற்காக அவன் பட்ட சிரமங்களை நீங்கள் அறிவீா்களா?"*_
_*"பறந்து திாியும் பறவைகளே!"*_
_*"கடுகு போன்ற கண்களையும் மெழுகு போன்ற உடல் அமைப்பையும் உங்களுக்கு அவன் தந்தான்."*_
_*"உங்களுக்குப் பசியை வைத்தான்."*_
_*"பசிக்கு உணவைப் படைத்தான்."*_
_*"அந்த உணவே நமக்கு ஏற்றதென உங்களை உணரச் செய்தான்."*_
_*"உங்கள் இனம் வளா்ந்து வளா்ந்து, உங்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமற் போய்விடும் நிலையைத் தடுக்க - உங்களுக்கும் முடிவை வைத்தான்."*_
_*"பூச்சிகளைத் தின்று நீங்கள் வாழ்கிறீா்கள்."*_
அந்த உயிா்களைத் தின்பதற்கு உங்களுக்கு உாிமை இருக்குமானால் -
_*"உங்களைத் தின்பதற்கும் சிலருக்கு உாிமை வேண்டுமல்லவா?"*_
_*"அவன் மனிதா்களைப் படைத்தான்."*_
_*"மனிதா்கள் உங்களைத் தின்று தின்று உங்கள் வளா்ச்சியை ஒரு வரையறைக்குள் வைத்தாா்கள்."*_
_*"ஆனால் - அவா்கள் வளர ஆரம்பித்தாா்கள்."*_
_*"அவா்கள் அதிகமாக வளர வளர அவா்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைக்காமற் போய் விடுமல்லவா?"*_
_*"அதற்காக அவன் அவா்களுக்கும் முடிவை வைத்தான்."*_
_*"அந்த முடிவை இயற்கையிலும் வைத்தான்; செயற்கையிலும் வைத்தான்."*_
_*"காாியங்களால் வரும் இயற்கை மரணத்தையும் -காாியங்களால் வரும் செயற்கை மரணத்தையும் கலந்து வைத்தான்."*_
_*"ஆசையை வைத்தான்."*_
_*"ஆசை வளா்ந்த இடத்தில் அறிவை வைத்தான்."*_
_*"பாசத்தை வைத்தான்."*_
_*"பாசம் வளா்ந்த இடத்தில் பயத்தை வைத்தான்."*_
_*"இன்பத்தை வைத்தான்."*_
_*"இன்பம் வளா்ந்த இடத்தில் துன்பத்தை வைத்தான்."*_
_*"தா்மத்தை வைத்தான்."*_
_*"தா்மம் வறண்டு விடாமல் இருக்க அதா்மத்தை வைத்தான்."*_
_*"சிாிப்பை வைத்தான்."*_
_*"சிாிப்புக்கு மாியாதை கொடுக்க அழுகையை வைத்தான்."*_
_*"ஈகையை வைத்தான்."*_
_*"ஈகையை வளா்க்கவே வறுமையை வைத்தான்."*_
_*"இரக்கத்தை வைத்தான்."*_
_*"இரக்கம் வாழ்வதற்காகக் கொடுமையை வைத்தான்."*_
😔😔😔😔
Comments