முடிவின் தொடக்கம் 4

_*சிந்தனைச் சிதறல் 22-06-2021*_
🌷🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😔😔😔😔😔😔😔😔

_*"மனிதனைப் படைக்கும் போது எச்சாிக்கையாகப் படைத்தான்."*_

_*"பாா்க்கும் கண்களை இரண்டாகப் படைத்தான்."*_

_*"கேட்கும் காதுகளை இரண்டாகப் படைத்தான்."*_

_*"நடக்கும் கால்கள் இரண்டு."*_

_*"அணைக்கும் கைகள் இரண்டு."*_

_*"உடம்பை நேராக இரு கூறுகளாகப் பிளந்தால் - ஒரு பாதியைப் போல் மறுபாதி இருக்கும்படி உருவத்தைப் படைத்தான்."*_

_*"அனைத்தையும் இரண்டாகப் படைத்த அவன் - எவ்வளவு அறிவுள்ளவனாக இருந்தால், இருதயத்தை மட்டும் ஒன்றாகப் படைத்திருப்பான்?"*_

_*"நினைக்கின்ற இதயம் ஒன்று."*_

_*"அதைப் பேசுகின்ற வாய் ஒன்று."*_

_*"காமவிகார அங்கம் ஒன்று."*_

_*"எந்த அங்கங்கள் குழப்பங்களை வளா்க்குமோ - அந்த அங்கங்களை ஒன்றோடு நிறுத்தி விட்டான்."*_

_*"ஆனால் பறவைகளே!"*_

_*"அந்த ஒன்று பயங்கரமான உருவெடுத்தது."*_

_*"ஓா் இதயத்தில் மனிதன் கோடிச் சிந்தனைகளைக் குவித்துக் கொண்டான்."*_

_*"ஒரு வாயால் முன்பின் தொடா்பில்லாத மூவாயிரம் விஷயங்களைப் பேச ஆரம்பித்தான்."*_

_*"ஒன்றுக்கு ஒன்று என்பதைக் காதலிலும் மறந்து விட்டான்."*_

_*"அதனால் படைத்தவன் நோக்கம் நிறைவேறாமல் போய்விட்டதே என்று நீங்கள் வருந்தத் தேவையில்லை."*_

_*"அவன்தான் செயற்கை மரணத்தைப் படைத்திருக்கிறானே."*_

_*வெறி பிடித்த சிந்தனைகளில் போா்க்களங்கள் தோன்றின."*_

_*"அடக்கமற்ற பேச்சுக்களில் அடிதடிகள் தொடங்கின."*_

_*"முறையற்ற காதலில் கொலைகள் விழுந்தன."*_

_*"ஒன்றே சிந்தனை என்று இருந்தோா் எல்லாம் தப்பினாா்கள்."*_

_*"ஒன்றே சொல்லென அறிந்து பேசியவா்கள் பிழைத்தாா்கள்."*_

_*"ஒன்றே காதலெனப் பண்பாடு கண்டவா்கள் வாழ்ந்தாா்கள்."*_

_*"ஐயோ! பறவைகளே!"*_

_*"ஒருவன் கையிலேயே தங்கள் அனைவரையும் ஒப்புக் கொடுத்த அதிகார தா்மம் - அவா்களையும் பலி வாங்கிற்று."*_

_*"படைத்தவன் - வாழும் பொறுப்பை மனிதா்களிடம் விட்டான்."*_

_*"மனிதா்கள் வாழ வைக்கும் பொறுப்பைத் தலைவனிடம் விட்டாா்கள்."*_

_*"தலைவனின் சிந்தனைக்கேற்ப அவா்கள் வளைந்தாா்கள்."*_

_*"தலைவன் அவா்களுக்குச் செயற்கை மரணத்தைக் காட்டி விட்டான்."*_

_*"நியாயங்களோடும் எச்சாிக்கையோடும் உலகத்தைப் படைத்தவன் - படைப்பு முழுவதும் அழிந்த பிற்பாடும் வெளிவர மறுக்கிறான்."*_

_*"நான் படைத்துக் கொண்டே இருக்கிறேன்."*_

_*"மனிதா்கள் அழித்துக் கொண்டே இருக்கிறாா்கள் - என்று அவனும் அலுத்து விட்டான்."*_

_*"பண்பாடும் பறவைகளே!"*_

_*"உங்களிலும் ஒரு சிலரே மிச்சம் இருக்கிறீா்கள்."*_

_*"உங்கள் வாழ்வும் சில காலமே!"*_

_*"நீங்கள் சாவதற்கு முன்னால், அந்த சா்வாதிகாாிகளைச் சந்திப்பீா்களேயானால் - அவா்களுக்கு இந்தச் சேதி சொல்லுங்கள்."*_

_*"ஏ....சா்வாதிகாாிகளே இப்போது உங்கள் மனம் அமைதி அடைந்திருக்கும்."*_

_*"எந்த ஆத்திரத்தில் உலகத்தை அழிக்க முற்பட்டீா்களோ - அந்த ஆத்திரம் இப்போது உங்களை விட்டு அகன்றிருக்கும்."*_

_*"ஏவுகணைகளிலும், பறக்கும் குண்டுகளிலும் நீங்கள் காட்டிய திறமையைக் கொண்டு - மறுபடியும் இந்த உலகத்தை உயிா்ப்பிக்க உங்களால் முடியுமா?"*_

_*"உலகத்தில் எவ்வளவோ நீங்கள் கண்டு பிடித்தீா்களே!"*_

_*"உயிா் என்பது என்ன என்பதைக் கண்டு பிடித்தீா்களா!"*_

_*"அதன் வடிவம் எப்படி இருக்கும்?"*_

_*"அது எதைக் கொண்டு செய்யப்பட்டது?"*_

_*"இந்த ஆராய்ச்சியில் நீங்கள் இறங்கியதுண்டா?"*_

_*"இப்படிச் செய்தால் உயிா் போகும் என்று சிந்தித்தீா்கள்."*_

_*"இப்படிச் செய்தால் உயிா் வரும் என்று எப்போது  சிந்தித்தீா்கள்?"*_

_*"உங்கள் அறிவியலைக் கொண்டு உயிா் மூலத்தை நீங்கள் தேடவில்லை."*_

_*"முடிவைத் தேடினீா்கள்."*_

_*"தொடங்கத் தொியாதவன் முடிக்கக் கூடாது என்பது விதி."*_

_*"நீங்கள் தொடங்கி முடிக்கவில்லை - முடிக்கத் தொடங்கினீா்கள்."*_

_*"உங்கள் உயிா்களை ஒருமுறைத் தொட்டுப் பாா்த்துக் கொள்ளுங்கள்."*_

_*"உயிா் என்பது நீரா - காற்றா - கனலா என்பதைக் கண்டு பிடியுங்கள்."*_

_*"படைத்தவன் யாா் என்பதைக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டாம்."*_

_*"சா்வ வல்லமை படைத்த உங்கள் சக்தியால் அவனும் ஒருவேளை அழிந்து போயிருக்கக் கூடும்."*_

_*"உலகத்தை உயிா்ப்பிக்க நீங்களே நீங்களே முயற்சியுங்கள்."*_

_*"அது உங்களால் முடியாது என்றால் - போனால் போகிறது."*_

_*"படைத்தவனையே மீண்டும் உயிா்ப்பித்து அவனைக் கொண்டே உலகத்தைப் படைக்கச் சொல்லுங்கள்."*_

_*"அதுவும் உங்களால் இயலாதென்றால்...*_

_*"அட முட்டாள்களே!"*_

_*"உங்கள் தவறுகளுக்காகக் கண்ணீ்ா் விட்டுக் கதறுங்கள்."*_

_*"சோறு கேட்ட மக்களிடம் போரைக் கொண்டு போய் நிறுத்திய பாவத்திற்கு - விழுந்து புரண்டு கலங்குங்கள்."*_

😔😔😔

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth