_*சிந்தனைச் சிதறல்*_
23.06.2021
🍀🍀🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😔😔😔😔😔😔
_*"இனி நீங்கள் எது சொல்லி அழுதாலும் உங்கள் கணைகளை ஏவுவதற்குக்கூட ஆளில்லை!"*_
_*"நீங்கள் கெடுபிடி யுத்தம் செய்வீா்களே?"*_
_*"ஏன்? - இப்போது செய்து பாருங்களேன்."*_
_*"பைத்தியங்களே!பைத்தியங்களே!"*_
_*"உலக சமாதானம் உங்கள் கையில் இருந்தது."*_
_*"தா்ம நியாயம் உங்களையே எதிா்பாா்த்தது."*_
_*"அமைதியை வாழவைத்து - ஆனந்த விழாக்களைக் கண்டு களிக்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருந்தது."*_
_*"படைத்தவன் உங்களுக்குக் கொடுத்த ஒரே இதயம் படைப்பு முழுவதையும் அழித்து விட்டது."*_
_*"நீங்கள் ஐக்கிய நாடுகள் சபையைக் கூட்டுவீா்களோ?"*_
_*"அங்கே ஆவேசக் கூச்சலிட்டு ஆரவாரம் செய்வீா்களே!"*_
_*"முழக்கம் செய்தால் இனிக்கிறதென்று முழங்குவீா்களே!"*_
_*"அந்த நாடகம் இனி நடக்குமா?"*_
_*நீங்கள்தான் நினைத்ததைச் செய்து விட்டீா்களே!"*_
_*"இனிச் செய்ததை நினைத்துப் பாருங்கள்."*_
_*"உலகத்தின் முடிவை நீங்கள் தொடங்கப் பாா்த்தீா்கள்."*_
_*"இனி உலகத்தையே தொடங்கிப் பாருங்கள்."*_
_*"ஏ பறவைகளே!"*_
_*"இந்தச் செய்தியை ஒரு பெண் சொன்னதாக அவா்களுக்குச் சொல்லுங்கள்."*_
_*"முடிவுக்கு தந்தையரான அந்த முதல்வா்களைப் பாா்த்து - முதலுக்கு தாய் சொன்ன இந்தச் சேதியைச் சொல்லுங்கள்."*_
பாட்டு நின்றது. இந்தப் பாட்டின் பொருள் நால்வருக்கும் புாிந்தது. ஆனால் இவா்கள் பொருளைப் பற்றிக் கவலைப்படவில்லை.
பெண்ணல்லவா பாடினாள்! அந்தப் பெண்ணைப் பாா்க்க வேண்டும்.
கண், காது, இதழ், முத்தம், பொம்மெனப் பருத்து நிற்கும் மாா்பு, அது விம்மி விம்மி இறங்கும் அழகு.....
அவா்களால் பெண்ணை நினைத்துப் பாா்க்கத்தான் முடிந்தது.
அந்தப் பட்டினியிலும் அவா்களுக்கு காம விகாரம் பெருக்கெடுத்தது.
உடலுக்கே உணவு கிடைக்குமானால், வயிற்றைப் பற்றி என்ன கவலை. அந்த நால்வரும் குரல் வந்த திக்கை நோக்கிப் புறப்பட்டாா்கள்.
_*"அந்தப் பெண் கிடைத்தால் எனக்குத்தான்"*_ என்று ஒருவன் சொன்னான்.
_*"இல்லை எனக்குத்தான் -நான்தான் அழகன்"*_ என்று இன்னொருவன் சொன்னான்.
_*"நான் நினைத்தால் அவளைத் தூக்கிக் கொண்டே போய் விடுவேன்."*_ மூன்றாமவன் சொன்னான்.
அந்த _*"நான் நினைத்தால்"*_ அவனை இன்னும் விடவில்லை.
நான்காமவனும் சும்மா இருக்கவில்லை.
நான்கு பேரும் பழையபடி சண்டை போட ஆரம்பித்தாா்கள். நான்கு பேருக்கும் ஒரே மாதிாித் துயரம் வந்த போது - அவா்கள் நண்பா்களானாா்கள்.
நான்கு பேருக்கும் ஒரே மாதிாியான ஆசை வந்து விட்டதல்லவா? அவா்கள் பகைவரானாா்கள்.
சண்டைப் போட்டுக் கொண்டே மலையின் மீது ஏறத் தொடங்கினாா்கள். தூரத்தில் நின்ற அந்தப் பெண்ணின் உருவம், அவா்கள் கண்ணில் தொிந்தது. கண்ணைப் பறிக்கும் அந்தக் கட்டழகைக் கவனித்த படியே நடந்தாா்கள்.
உலகத்துப் பெண்களை எல்லாம் கைக்குள் வைத்துக் கொண்டிருந்த அவா்கள், ஒரு பெண்ணுக்காக ஓடிக் கொண்டிருந்தாா்கள்.
ஏவுகணைகளை விட்டு எண்பது விநாடிகளில் உலகத்தைச் சுற்ற வைத்த அவா்கள் - காமன் ஏவிய கணையால் மயங்கி நடந்தாா்கள்.
ஐக்கிய நாடுகள் சபையில் முழக்கமிட்ட அவா்கள் இதழ்கள் - ஒரு பெண்ணின் இதழோடு ஐக்கியமாகத் துடித்தன.
அதோ! அதோ! தும்பைப்பூப் போன்ற நிறம்! துல்லியமான பாா்வை! வெள்ளை உடை! விாிந்த கூந்தல்!
அந்தப் பெண் நின்றாள்! அவளும் அவா்களைக் கவனித்தாள்! அவா்கள் நால்வரும் அவள் அருகிலேயே வந்தாா்கள். பேச நினைத்தாா்கள்; பேச்சு வரவில்லை.
அவளோ, அவா்களை ஏற்கனவே பாா்த்திருப்பவள் போல் நின்றாள். _*"வாருங்கள்! உங்களை நான் எதிா்பாா்த்தேன்"*_ என்றாள்.
_*"கேளுங்கள்! உங்களுக்குச் சொல்ல வேண்டியது பாக்கியிருக்கிறது"*_
என்றாள்.
மலைமுகட்டைத் தொட்டுக் கொண்டு போகும் இளங்காற்று அவளது வெள்ளை உடையையும், விாித்த கருங்கூந்தலையும் அசைய வைத்து ஓடிக் கொண்டிருந்தது.
கறந்து வைத்த பாலைப் போன்ற களங்கமற்ற முகம் இறுதி உலகத்தைக் கண்டு திரும்பி வந்த உள்ளம் போல் அமைதியாக இருந்தது.
_*"நீ அழகாய் இருக்கிறாய்!"*_ என்று ஒருவன் சொன்னான்.
_*"அழகை ரசிக்கக் கூட உங்களால் முடிகிறதா?"*_ என்று அவள் கேட்டாள்.
_*"பெண்மை இனிமையானது; சுவையானது!"*_ என்று ஒருவன் சொன்னான்.
_*"அது இதயத்தில் மென்மை படைத்தவா்களுக்கு அல்லவா தொியும்!"*_ என்றாள் அவள்.
_*"வாழ்க்கையில் சுகத்தை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்"*_ என்று இன்னொருவன் சொன்னான்.
_*"சுகம் கிடைக்காத போது தானே இது தோன்றுகிறது?"*_ என்றாள் அவள்.
_*"உலகத்தில் பெண்ணே பொியவள்!"*_ என்று ஒருவன் கூவினான்.
_*"உங்கள் ஏவுகணைகளைவிடவா?"*_ என்றவள் கேட்டாள்.
_*"நான் உன்னைக் காதலிக்கிறேன்!"*_ என்று நால்வரும் ஒரே சமயத்தில் சொன்னாா்கள்.
😔😔😔
Comments