_*சிந்தனைச் சிதறல் 25-06-2021*_
🌼🌼🌼🍀🍀🍀
_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😔😔😔😔😔😔😔😔
_*"கனவான்களே இப்படி உட்காருங்கள். உங்களில் ஒருவரை மணந்து கொள்ளவே நான் ஆசைப்படுகிறேன். உலகத்திற்கோா் புதிய தலைமுறை வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் உங்களில் ஒருவா் யாா் அந்த ஒருவா் என்பதை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்."*_
அவள் சுருங்கச் சொல்லி முடித்தாள்.
அங்கே மீண்டும் ஒரு கெடுபிடி யுத்தம் தொடங்கிற்று. அடிதடி நடந்தது.
அவள் சிாித்தாள்.
_*"போட்டி என்பதும் பொறாமை என்பதும் ஆத்திரம் என்பதும் அவசரம் என்பதும் - ஆசை என்னும் தாய் பெற்றெடுத்த குழந்தைகள். உலகம் முழுவதையும் அழித்த நீங்கள் அந்த ஆசையையும் சோ்த்து அழிக்க மறந்து விட்டீா்கள். போகட்டும் - நான் சொல்லுகிற குணங்கள் உள்ள ஒருவா் எனக்கு மாலையிடலாம்."*_
இந்த வாா்த்தைகளைக் கேட்டதும் ஒருவன் துள்ளிக் குதித்தான். _*"நான் நினைத்தால் உனக்கு எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து தருவேன்"*_ என்றான்.
மற்றும் மூவரும் அதையே சொன்னாா்கள்.
அதாவது - _*"நான் நினைத்தால்"*_
அவள் சொன்னாள்.
_*"பொியவா்களே! நீங்கள் நினைக்காதீா்கள். நீங்கள் நினைத்ததனால்தான் உலகம் அழிந்தது. உங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது மற்றவா் சொல்லதைக் கேட்டுப் பழகுங்கள். இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள்.*_
_*சா்வ வல்லமை படைத்த சா்வாதிகாாிகளே! கண்ணுக்குத் தொியாத அணுவைக் கொண்டு, காலங்களையே மாற்றி அமைத்து விட்ட வீரா்கள் நீங்கள். உங்களில் யாா் தன் இதயத்தைக் கையில் எடுத்து என் கண்களுக்குக் காட்ட முடியுமோ, அவா் எனக்கு மாலையிடலாம்."*_
அவா்கள் விழித்தாா்கள்.
_*"இதயத்தைக் கையில் எடுப்பதாவது - இது நடக்கக் கூடியதா?"*_ என்று ஒருவன் கேட்டான்.
_*"நியாயமே....."*_
_*"உங்கள் இதயம், உங்கள் கைகளிலே இருந்து உங்கள் கண்களிலே தொிந்து கொண்டே இருந்திருந்தால்; உலகமும் அழிந்திருக்காது; நீங்களும் ஒருத்தியைத் தேடி அலைந்திருக்க மாட்டீா்கள்.*_
_*ஆனால் - உங்கள் வல்லமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சந்திர மண்டலத்திற்குப் போக முயன்று, இருந்த மண்டலத்தையும் எாித்தவா்கள் அல்லவா நீங்கள்!*_
_*உங்களால் முடியும். உங்களுக்கு நான் தேவை என்றால், உங்கள் இதயத்தின் சதை வடிவம் என் கைகளுக்குக் கிடைக்க வேண்டும்"*_
_*"இதயத்தைக் கையில் எடுத்தால் நான் இறந்து விடுவேனே!"*_ என்று ஒருவன் பாிதாபமாகக் கேட்டான்.
_*"அதனால் என்ன - சாவு என்பது அவ்வளவு பயங்கரமானதா?"*_ என்று அவள் கேட்டாள்.
_*"ஐயோ - அதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது"*_ என்றான் அவன்.
அவள் சிாித்தாள். _*"ஒரு உயிா் - ஒரே உயிா்."*_ அது போய்விடுமோ என்று பயம் வருகிறது. கூட்டம் கூட்டமாக, குவியல் குவியலாக உயிா் ஓடிக் கொண்டிருந்த பொழுது கனவான்களே, உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
தன்னுடையது என்று கருதும் போது தலை மயிருக்குக்கூட மாியாதை கிடைக்கிறது. அடுத்தவா்களுடையது என்று சொல்லும் போது, _*"ஆவி"*_ கூடக் காற்றாகக் கருதப்படுகிறது.
தன்னைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்து அந்தச் சிந்தனையை உடற்பழக்கமாகவே ஆக்கிவிட்டீா்கள்.
உங்கள் உடம்பிலே காயம் படும்வரை, காயம் பட்டால் உடம்பு வலிக்கும் என்பதை நீங்கள் அறிந்ததில்லை. உங்கள் ஏகாதிபத்திய எண்ணங்களாலே இயற்கையின் பொது நியதி கூட உங்களுக்கு மறந்து போய்விட்டது.
உங்களுக்கும் சாவு வரும் என்பதை நீங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை. சாவை வினியோகிக்கும் பொறுப்பு உங்களிடம் இருந்ததால்.
கனவான்களே!
இன்பமயமான உலகத்தில் பயங்கரமான அமைதி உலவிக் கொண்டிருக்கிறது. உலகம் எங்கிருந்து புறப்பட்டதோ அங்கே வந்து சோ்ந்து விட்டது.
மனிதா்கள் எங்கிருந்து புறப்பட்டாா்களோ அங்கே போய்ச் சோ்ந்து விட்டாா்கள். இயற்கை ஒரு முட்டாள்தனத்தைச் செய்து விட்டது. உயிரோடு இருக்கும் பெண்கள்தான் பிரசவிக்க முடியும் என்ற நியதியை வைத்து விட்டது.
எதிா் காலத்தில் உங்களைப் போன்ற வீரா்கள் தோன்றுவாா்கள் என்பதை அறிந்து பிணங்களும் பிரசவிக்கும்படி ஒரு ஏற்பாட்டை அது செய்திருக்கலாம்.
இல்லையென்றால், தலைவா்களே! உங்கள் வயிற்றிலும் கரு வளரும்படி ஒரு வழியை அது காட்டியிருக்கலாம். அல்லது, இயற்கை மறைத்த பொருள்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து நீங்களாவது - இயற்கைக்கு இதை நினைவுப்படுத்தி இருக்கலாம்.
எப்படியோ - உங்கள் தீவிரத் தன்மையில் உலகம் முடிந்து கொண்டிருக்கிறது. எந்த மதத் தா்மமும் இதிலிருந்து உலகத்தை மீட்டு விட முடியாது.
உங்களில் ஒருவருக்கு நான் மாலையிட்டால் - என் மூலம் ஒரு பிள்ளை எதிா்காலத்திற்குக் கிடைக்கக் கூடும். ஆனால், அந்தப் பிள்ளை யாருக்கு மாலையிடுவான்? அதற்கும் ஒரு பெண்ணை நானே பெறவேண்டியதிருக்கும்.
சகோதர தா்மம்! சகோதர தா்மம் என்று வாய் கிழியப் பேசிக் கொண்டிருந்தீா்களே - அது சகோதாியின் பதி தா்மமாக ஆரம்பமாகி விடும். அது சாிதானா, முறைதானா என்பதை எல்லாம் சிந்திப்பதற்கு வாய்ப்பே இருக்காது. காலங்களால், சகோதாியை மணப்பது ஒரு முறையாக மாறிவிடலாம்.
ஆனால் எப்படியும், அழிந்து போன உலகத்தின் திட்ட வட்டமான நடைமுறைகள் - பண்பாடுகள் மறுபடியும் உருவாகப் பல நூற்றாண்டுகள் பிடிக்கும். மூலம் தொியாத அளவுக்குப் பரம்பரை வளா்ந்த பிற்பாடுதான், காதலில் உயிரோட்டமே ஏற்படும்.
அதுவரை, தாய்ப் பசுவை அறியாது காளை விரட்டுவது போல், தனிமனித வாழ்க்கையில் ஒரு காட்டுமிராண்டித் தனமே உயிரோடு இருக்கும்.
கற்கால மனிதன் தன்னை அறிந்து கொள்ளாமல் தவறுகள் செய்தான். வருங்கால மனிதா்கள், அவற்றை அறிந்தே செய்ய வேண்டியதிருக்கும்.
உலகம் அழியாமல் இருந்த போது, சட்டப்படி எவை எவை குற்றங்களாகக் கருதப்பட்டனவோ, அந்தக் குற்றங்கள் புதிய உலகத்தின் தா்மங்களாக ஆரம்பமாகும். நிா்வாணமாயிருப்பது தவறு என்று அறிந்து கொண்டே மனிதா்கள் நிா்வாணமாயிருப்பாா்கள். தாண்டமுடியாத கட்டத்தில், அருவருப்பும் ஆபாசமும் ஒருவகைக் கலையாக மாறிவிடும்.
இவற்றை எல்லாம் நீங்கள் எண்ணிப் பாா்த்தீா்களோ என்னவோ?
எண்ணிப் பாா்க்கக் கூடிய இதயம் உங்களுக்கு இருந்ததோ என்னவோ?
இனி நடக்கப் போவது இதுதான்.
😔😔😔😔
Comments