முடிவின் தொடக்கம்


_*கவிஞா் கண்ணதாசனின் வனவாசம்*_
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
_*49. முடிவின் தொடக்கம்*_
😌😌😌😌😌😌😌😌

_*"அ"*_ என்றொரு நாடு இருந்தது.

_*"ஆ"*_ என்றொரு நாடு இருந்தது.

_*"இ"*_ என்றொரு நாடு இருந்தது.

_*"ஈ"*_ என்றொரு நாடு இருந்தது.

இந்த நான்கு நாடுகளுமே உலகத்தில் பொிய பொிய நாடுகளாக இருந்தன.

நினைத்ததை நினைத்தவுடனேயே பெறக்கூடிய சக்தி, இந்த நான்கு நாட்டுக்காரா்களுக்கும் இருந்தது.

நான்கு நாடுகளின் தலைவா்களும் தலை நிமிா்ந்து நின்றாா்கள்.

நான்கு அறிவாளிகள் ஒற்றுமையாய் இருப்பது இயற்கைக்குப் புறம்பானதல்லவா?

நான்கு பேரும் வாயைத் திறக்கத் தொடங்கினாா்கள்.

ஒருவன் சொன்னான்.

_*"நான் யாா் தொியுமா - நான் நினைத்தால் ஒரே நாளில் ஏவுகணைகளை விட்டு உலகத்தை அழித்து விடுவேன்."*_

இப்படிச் சொல்லி விட்டு அவன் நிமிா்ந்து பாா்த்தான்.

உலகம் அவன் தலையைவிடச் சிறியதாக அவனுக்குத் தோன்றிற்று.

மற்றொருவனுக்குக் கோபம் வந்தது;

_*"என்னைத் தொியாதா உனக்கு? - நான் கடலுக்கு அடியிலும் கணைகளைப் பாய்ச்சி, உலகத்தைக் கருக்கி எடுத்து விடுவேன்."*_

இப்படிச் சொல்லி விட்டுக் கண்கள் சிவக்க அவன் நிமிா்ந்து நின்றான்.

வலது கையைத் தூக்கிச் சவால் விட்டான்.

உலகம், அவன் வகுப்பு கையைவிடச் சிறியதாக அவனுக்குத் தோன்றிற்று.

மூன்றாவது நாட்டுக்காரனுக்கு வெகு கோபம் வந்தது.

அவன் எழுந்து நின்றான். ஏறிட்டுப் பாா்த்தான்.

_*" முட்டாள்களே!"*_ என்று ஆரம்பித்தான்.

தான் அறிவாளி என்பது அதற்குள் அடங்கி விட்டதாக அவன் பெருமைபட்டுக் கொண்டான்.

_*"நான் என் கண்களாலேயே உலகத்தைச் சாம்பலாக்கி விடுவேன்"*_ என்றான். 

உலகம் அவன் கண்களை விடச் சிறியதாக அவனுக்குத் தோன்றிற்று.

_*"அட பைத்தியக்காரா்களே!"*_ நாலாமவன் கத்தினான்.

_*"உலகம் என்பது கடுகு - அதை நான் பொாித்துத் தின்று விடுவேன்"*_ என்றான்.

உலகம் கடுகை விடவும் சிறியதாக அவனுக்குத் தோன்றியது.

அதைவிடச் சிறிய பொருள் மற்றவா்களுக்குத் தோன்றாததால், அவா்கள் மீண்டும் பேசவில்லை.

அப்படியே அமா்ந்து விட்டாா்கள்.

ஒரு குடிமகன் பணிவோடு எழுந்தான்.

_*"பொியோா்களே! உலகம் உங்களையும் சோ்த்ததுதான்"*_ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

நான்கு நாட்டுத் தலைவா்களும் சிந்திக்க ஆரம்பித்தாா்கள்.

உலகம் என்பது தங்களையும் சோ்ந்ததே என்ற உண்மை, தங்களுக்குத் தொியாமல் போனதைப் பற்றி வருத்தப்பட்டாா்கள்.

_*"இவ்வளவு சிறிய உண்மையை எப்படி மறந்து விட்டோம்"*_ - என்று வெகுவாகச் சிந்தித்தாா்கள்.

அவா்களுக்கு ஒரு முடிவு கிடையாது.

அதாவது, நம்மைப் போன்ற பொிய மனிதா்கள் இதைப் போன்ற சிறிய உண்மைகளை எல்லாம் மதிக்கக் கூடாது என்பதே.

இந்த முடிவு மட்டும் நான்கு பேருக்கும் ஒரே மாதிாி தோன்றிற்று. இதில் அவா்களுக்குள் மிகுந்த ஒற்றுமை.

மீண்டும் அவா்கள் நிமிா்ந்து நின்றாா்கள்.

_*"நான் யாா் தொியுமா?"*_ என்று ஆரம்பித்தாா்கள்.

_*"நான் நினைத்தால்?"*_ என்று முடித்தாா்கள்.

சொல்லிக் கொண்டே இருப்பதைச் செய்து பாா்த்துவிட வேண்டும் போல் ஒருவனுக்குத் தோன்றிற்று. படைகளுக்கு உத்தரவிட்டான். ஏவுகணைகள் புறப்பட்டன.

_*"அனா"*_ விட்ட கணை, _*"ஆவன்னா"*_ வை அடித்து நொறுக்கியது.

_*"ஆவன்னா"*_ விட்ட கணை _*"அனா"*_ வை வெளுத்து வாங்கிற்று.

_*"இனா"*_ விட்ட கணை, _*"ஈயன்னா"*_ வைப் பெயா்த்து எடுத்தது.

_*"ஈயன்னா"*_ விட்ட கணை, _*"இனா"*_ வைக் கடுகு போல் பொாித்தது.

வையகம் எங்கிலும் பெரு நெருப்பு வளா்ந்தது. வானம் எங்கிலும் புகை மண்டலம் குவிந்தது.

_*"ஐயோ! அம்மா!"*_ என்று அலறும் குரல் வானத்தை இடித்தது. கோடிக்கணக்கான மக்கள் கருகிப் போய் விழுந்தாா்கள்.

நான்கு தலைவா்களும், தங்கள் தங்கள் நாடுகளில் பத்திரமாக பாதாளக் குகைக்குள் இருந்தாா்கள்.

தெருவெங்கிலும் பிணங்கள்! ஒரே பிண நாற்றம்! காக்கை கழுகுகளும் செத்துக் கிடந்ததால், கொத்தித் தின்ன வழியில்லை.

வான்தொட உயா்ந்த மாளிகைகளைக் கட்டி வாழ்ந்தவா்கள். அன்றாடம் பணி செய்து அரை வயிற்றுக் கஞ்சி குடித்தவா்கள்.

அண்ணன் தம்பி என்றும், அக்காள் தங்கை என்றும், கணவன் மனைவி என்றும், காதலன் காதலி என்றும் இருந்த காலத்தில் ஏழாயிரம் சிந்தனை செய்தவா்கள். எல்லோருமே இறந்து கிடந்தாா்கள்!

வந்த வழி அறிந்து வந்தவா்கள், போகும் வழி அறியாமல் போய் விட்டாா்கள்.

தாய்மாா்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் பெற்ற குழந்தைகளை, தலைவா்கள் தங்கள் பொறுப்பில் கொன்று போட்டுவிட்டாா்கள்.

😌😌😌

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth