எண்ணங்களை மாற்றி கொள்ளுங்கள்..!!

இந்தியாவை விட்டு வெளியேறும் போது, ​​இந்தியா வழங்க முடியாத சிறந்த வாய்ப்புகளை தேடி செல்கிறீர்கள். அது சரியானதே. ஆனால், அந்த வாய்ப்புகள் சரிவராமல் அந்த இடம் அந்த நாடு போர்க்களமாக மாறினால், வரி செலுத்தும் இந்தியர்களின் பணத்தில் உங்களை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரும் இந்தப் பொறுப்பு திடீரென எங்கள் தோள்களில் ஏன் வந்து முடிகிறது? 

மனிதாபிமான அடிப்படையில் நிச்சயமாக செய்யலாம் கட்டாயம் செய்கிறோம் ஆனால் இந்திய அரசாங்கம் உங்களுக்கு போதுமான அளவு செய்யவில்லை என்று ஏன் இந்த அரசியல் அழுகை நாடகம்? வெட்கப்பட வேண்டும், இந்திய அரசைக் குறை கூற. இந்திய அரசாங்கம் என்பது உங்கள் அப்பா நடத்தும் ஹோட்டலில் சர்வரா..?! 

இந்தியாவை விட்டு வெளியேறும் நீங்கள் முன்பு பயன்படுத்திய உங்கள் பணத்தையும் உங்கள் வளங்களையும் இப்போது பயன்படுத்தி திரும்பி வரவும். இல்லையேல் நீங்கள் சென்ற நாட்டை சொந்தமாக்கி கொண்டு அவர்களின் குடிமக்களுடன் குடிமக்களாக வாழ்ந்து விடுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். அவர்கள் உங்களை போல எந்த நாடகத்தையும் அரங்கேற்றவில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்காக போராடுகிறார்கள். அவர்கள் உதவி செய்ய வேண்டுகோள் விடுத்து அதை கெஞ்சி பெறுகின்றனர். மேலும் அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் அதற்கு தகுதியானவர்கள். ஆனால் நீங்கள், என்னமோ நரேந்திர மோடி அவர்கள் உங்களை வற்புறுத்தி கட்டாயப்படுத்தி உக்ரைனுக்கு அனுப்பி படிக்க வைக்க வற்புறுத்தியது போல நீங்கள் அதிகாரமாய் இந்த உதவியை கோருகிறீர்கள் அதிகாரமாய் திட்டுகிறீர்கள் குறைகூறி திரிகிறீர்கள்.

உதவியைக் கேளுங்கள், நீங்கள் அதைப் பெறுவீர்கள். இந்திய அரசாங்கத்தை இழிவுபடுத்தவும், பழி சுமத்தவும், அவமானப்படுத்தவும், பின்னர் வலுக்கட்டாயமாகவும் இந்த உதவியைக் நீங்கள் வாங்கி, அது வழங்கப்படும் போதும், உதவி வழங்கப்பட்ட பின்னரும் நன்றியற்றவர்களாக இருக்கிறீர்கள். இது முழுக்க முழுக்க தேச விரோதம்.

இது ஒரு போர் சூழல். ஏதோ சாலையோரத்தில் உங்கள் கார் மட்டும் பழுதாகி நிற்கும் சந்தர்ப்பம் போல அல்ல இது. இதிலிருந்து மக்களை மீட்பது ஒரு சவாலான
பணி. இந்தியா தனது இராஜதந்திரத்தைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், தனது மண்ணின் மகன்களையும் மகள்களையும் உங்கள் உதவிக்காக அனுப்புகிறது, உங்களுக்காக தங்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள இந்தியர்கள் உங்களுடன் தாயகம் திரும்பினர். இதற்கு வெகுஜன மட்டத்தில் பாராட்டு தேவை, பொறுப்பற்ற முறையில் அலட்சியம் செய்வது மற்றும் அரசாங்கம் போதுமான அளவு செயல்படவில்லை என்று புகார் கூறுவது கேவலமான தேசபற்றற்ற தேச துரோகத்துக்கு குறையாத செயல். தயவு செய்து உங்கள் எண்ணங்களை மாற்றுங்கள்.


நன்றி : ராம்னிக் பன்சால். 
தமிழாக்கம் : பிரகாஷ்

Comments

Popular posts from this blog

Technical Publication Ebooks Free Download

Volvo Group is Hiring Fresh Engineering Graduates under National Apprenticeship Training Scheme(NATS) for Skilling Indian Youth